மகிந்த தரப்பினர் இதே போன்று செயற்பட்டால் தமிழீழம் மலருமாம் – சிங்கக்கொடி சம்பந்தன்

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ந்தும் இதே போக்கில் செயற்பட்டால் தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெறும், சிறப்பு விவாதத்தில் உரையாற்றிய அவர்,

“உள்ளூராட்சி த் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி 44.69 வீத வாக்குகளை பெற்றுள்ள போதிலும் இவை பொய்கள் மூலமாக பெறப்பட்ட வாக்குகளாகும்.

இது 2015 அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த வாக்குகளை விடக் குறைவு தான். எனவே இந்த தேர்தலிலும் வெற்றிபெறவில்லை.

தேர்தல் பரப்புரையின் போது, தமிழீழ கதைகளை கூறியே சிங்கள மக்களை ஏமாற்றி இந்த வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஐதேகவுக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழீழம் உருவாக வழியை உருவாக்கும் என்று சிங்கள மக்களை ஏமாற்றி நம்ப வைத்திருக்கிறீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரான நாங்கள் தமிழீழத்தை கேட்கவில்லை.

ஒன்றுபட்டு ஒரே நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு தான் நாங்கள் கேட்கிறோம்.

ஆனால், நீங்கள் இதுபோன்று தொடர்ந்து நடந்து கொள்வீர்களேயானால், ஈழம் மலர்ந்து விடும். தாமரை மொட்டில் இருந்து தான் அந்த ஈழம் மலரும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
கொழும்பிலுள்ள அமெரிக்க இராஜதந்திரியொருவரின் கேபிள் தகவல் ஒன்றில் கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன் தனிப்பட்ட முறையில் பணத்தில் அக்கறை காட்டியதாக விவரித்துள்ளார்.
பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக முழு
கூட்டு எதிர்க்கட்­சியை 54 வீத­மான மக்­கள் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் நிரா­க­ரித்­துள்­ள­னர் என்று இரா.சம்­பந்­தன் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். நாட்டு மக்­க­ளில் 93

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*