வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று (18.02) இரவு 11.15மணியளவில் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திடமாக நின்ற கிளிநொச்சி விவேகானந்த நபர் கிழக்கை சேர்ந்த நடராஜா பிரசன்னா ( வயது 33 ) என்பவரின் பயணப்பொதியினை சோதனையிட்ட சமயத்தில் சுமார் 2கிலோ10கிராம் எடையுடைய கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்