பேருந்துக்குள் நிகழ்ந்தது கைக்குண்டு வெடிப்பே – சிறிலங்கா பிரதமர்

தியத்தலாவவில் பேருந்துக்குள் நிகழ்ந்தது ஒரு கைக்குண்டு வெடிப்பாக இருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தமக்கு தகவல் தெரிவித்துள்ளார் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இதுதொடர்பான தகவலை அவர் வெளியிட்டார்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, பயணிகளில் ஒருவரின் பையில் கைக்குண்டு இருந்திருக்கலாம் என்றும், விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 12 சிறிலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்தனர் என்றும் அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்