ரெலோவை கடுமையாக சாடும் சுரேஸ்!

பொதுக் கொள்கை என்­ப­தன் ஊடாக ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா என்ன கூற வரு­கின்­றார் என்­பதை அவர் வெளிப்­ப­டை­யா­கக் கூற வேண்­டும். இவ்­வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார்.

பொதுக்­கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் தமிழ்க் கட்­சி­கள் அனைத்­தும் ஒன்­றி­ணைய வேண்­டும் என்று ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா அழைப்பு விடுத்­தி­ருந்­தார். அது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் தெரி­வித்­தா­வது,

பொதுக் கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் ஒன்­றி­ணை­யுங்­கள் என்று கூறு­ப­வர்­கள் அதன் ஊடாக என்ன கூற வரு­கின்­ற­னர் என்­பதை வெளிப்­ப­டை­யா­கக் கூற வேண்­டும். தமது பொதுக் கொள்கை என்ன என்­ப­தைக் கூறி­னால் தான் நாம் ஆராய முடி­யும்.

தேர்­தல் காலங்­க­ளில் மக்­க­ளுக்கு கூறி­ய­வற்­றுக்கு முற்­றி­லும் மாறாக புதிய அர­ச­மைப்­பில் ஒற்­றை­யாட்­சிக்­கும், பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்­க­வும் இணங்­கி­யுள்ள கூட்­ட­மைப்­பு­டன் கூட்­டுச் சேர முடி­யாது. அப்­ப­டி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் ரெலோ அமைப்பு அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைய அழைப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது.

அர­ச­மைப்பு இடைக்­கால அறிக்­கையை நாம் பொதுக் கொள்­கை­யாக ஏற்­றுக் கொள்ள முடி­யாது. பிழை­யான விடங்­க­ளைச் சரி எனக் கூறிக் கொண்­டி­ருக்­கும் கூட்­ட­மைப்­பு­டன் இருந்து கொண்டு இணைப்­புப் பற்­றிப் பேசிப் பய­னில்லை. ரெலோவை பிரிந்து வாருங்­கள் என்று கோர­வில்லை, அது அவர்­க­ளின் சுய­வி­ருப்பு.

தேர்­தல் காலத்­தில் ஆச­னப் பங்­கீட்­டுக்­காக கூட்­ட­மைப்பை விட்டு வில­கு­கின்­றோம் என்று கூறி­ய­வர்­கள் சில மணி நேரத்­தி­லேயே கூட்­ட­மைப்­பு­டன் இணைந்­த­னர். நிலை­யான கொள்கை ஏமு் இல்­லாத இவர்­கள் அனை­வ­ரை­யும் அழைப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது.- என்­றார்.

தொடர்டர்புடைய செய்திகள்
அரசியல் ஞானம் பெற்ற தமிழ் மக்கள் தேர்தலை எதிர்காலத் தீர்வுடன் ஒப்பிட்டு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடுகளுமில்லை
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ போட்டியிடாது என்று அந்த கட்சியின் தலைமைத்துவக் குழுக் கூட்டத்தில் இன்று
தமிழரசுக் கட்சியின் எதேச்சதிகாரப் போக்கு உள்ளூராட்சி தேர்தல் தொகுதி பங்கீடு விடயத்திலும் தொடர்வதால் புளொட்டும் வெளியேற ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*