ஆனோல்ட் வேண்டாம்:சொலமன் சிறில் பரவாயில்லையாம்?

யாழ் மாநகரசபையின் முதல்வராக சொலமன் சிறில் அறிவிக்கப்பட்டால் மட்டுமே த.தே.கூட்டமைப்பை ஆதரிப்பதென்று ஈபிடிபி தலைமையால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆனோல்ட்டையே முதல்வராக்குவது எனவும் அதற்கு ஈபிடிபி உதவாவிடின் ஜ.தே.க மற்றும் சுதந்திரக்கட்சியின் ஆதரவை பெறப்போவதாக ஆனோல்ட் ஆதரவாளர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபை முதல்வராக தமிழரசு சொலமன் சிறிலை பிரேரித்தால் ஆதரவளிக்க தயாரென ஈபிடிபி அறிவித்துள்ளது.முன்னதாக தேர்தல் முடிவுகள் திருப்திகரமாக இல்லாத நிலையில், ஆனோல்ட்டை முதல்வராக்க வேண்டுமென்பதற்காக, தேர்தல் முடிவு வெளியான கையோடு,ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு சுமந்திரன் பேச்சு நடத்தியுமிருந்தார்.

ஈ.பி.டி.பியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ரெமீடியஸ், ஆனோல்ட்டை முதல்வராவதை எதிர்த்துவருகின்றார். ஆனோல்ட் முதல்வரானால் அந்த பகுதியில் அவர் பெரும் அரசியல் சக்தியாக மாறிவிடுவார் என டக்ளஸிற்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.டக்ளஸின் வாக்கு வங்கியும் அதே பகுதிகளை முன்னிறுத்தியே உள்ளதால் ஆனோல்ட் முதல்வராவதை டக்ளஸ் தரப்பும் விரும்பவுமில்லையென சொல்லப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாகவே சொலமன் சிறிலை முதல்வராக்கினால் ஈபிடிபி ஆதரவு எனும் புதிய வியூகத்தை ஈபிடிபி திறந்துள்ளது.
இதனிடையே சொலமன் சிறில் -ரெமீடியஸிடையே நடைபெற்ற சந்திப்பின் தொடர்;ச்சியாகவே சொலமன் சிறிலை முதல்வராக்கினால் ஈபிடிபி ஆதரவு எனும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்