பிரித்தானிய தமிழரின் தொடர் அழுத்தங்களால் பிரித்தானிய பராளுமன்றில் இலங்கை அரசின்மீது அதிருப்தி!

இலங்கைக்கான ஆயுத விற்பனையை உடனடியாக நிறுத்தக்கோரி புலம்பெயரத் தமிழர்கள் எடுத்து வரும் கடும் முயற்சிகளைத் தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆயுத விற்பனையை நிறுத்துவதற்கு சார்பாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இது தொடர்பான கேள்விகளையும் பாராளுமன்றில் எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று 24.02.2018 அன்று Greenwich and woolwich பாராளுமன்ற உறுப்பினர் Matthew Pennycook அவர்களை புலம்பெயர் தமிழரான சிவராஜா சிவசுதன் தலைமையில் பத்மலோஜினி குகேந்திரன்,
அஷந்தன் தியாகராஜா, செல்வராசா சபேசன்,மயூரன் சதானந்தன், வரதராஜா மோகனரூபன், ஆகியோர் தமிழர் தகவல் நடுவத்தின் பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்துதல் தொடர்பான பிரதான ஏற்பாட்டாளர் அஷந்தன் தியாகராஜா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கைக்கான ஆயுத விற்பனை தொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடாத்தவும்,ஆயுத விற்பனையால் ஈழத்தமிழர்கள் தொடரச்சியாக பாதிக்கப்படுவதனை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் matthew pennycook உங்கள் கோரிக்கை பற்றி ஏற்கனவே நான் அறிந்திருக்கிறேன் என்று கூறியபடியே தம்மை வரவேற்றதாகவும், தமது கோரிக்கையின் உண்மைத் தன்மையை புரிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதாகவும், ஆயுத விற்பனை தொடர்பில் வியாபார அமைச்சருடன் ஆலோசிப்பதாகவும் கூறினார்

பிரித்தானியாவின் இலங்கைக்கானஆயுத விற்பனையை நிறுத்த கோரிநடாத்தப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்சந்திப்புகள் யாவும் தமிழர் தகவல் நடுவத்தினால் ஏற்பாடுசெய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்