சிறிலங்காவின் சித்திரவதைகள் குறித்த புதிய ஆதாரங்களை வெளியிட்டது அல்-ஜெசீரா

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் அங்கு தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்வதாக அல்- ஜெசீரா தொலைக்காட்சி புதிய ஆதாரங்களை முன்வைத்துள்ளது.

தற்போதைய ஆட்சிக்காலத்தில் சித்திரவதை செய்யப்பட்ட தமிழர்களின் புதிய காணொலி சாட்சியங்களுடன் அல்- ஜெசீரா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் தமிழர்கள் சித்திரவதைகளை எதிர்கொள்வதாக இந்த காணொலிப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதில் சிறிலங்கா படைகளின் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களின் நேரடிச் சாட்சியங்களும் இடம்பெற்றுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்