கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் ஆயுதம் தரித்தத இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியிலம் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 வது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதியுமே இவ் பாதுகாப்பு இன்று காலைமுதல் வழங்கப்பட்டுள்ளது

கிளிநொச்சியின் கரைச்சிப் பகுதில் அமைந்துள்ள இவ் ஐந்து பள்ளிவாசல்களையும் கரைச்சியில் உள்ள 249 முஸ்லீம் குடும்பங்கள் வழிபாட்டிற்காக பாவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

தொடர்டர்புடைய செய்திகள்
உரிமைக்காக போராடிய தமிழர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று கூறிய கூத்தாடி ரஜினிக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக தமிழர் தாயகத்தின்
தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் அன்று மட்டக்களப்பில் மண்முனைப்பற்றிலமைந்துள்ள கிரான்குள விஸ்ணு வித்தியாலயத்தில் உள்ள
ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தினை புறக்கணிக்க தமிழ் மக்கள் வாழுமிடங்களெல்லாம் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் யாழிலும் அத பரவியுள்ளது.யாழில் சுவரொட்டிகளை

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*