ஜெனிவாவில் இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று…!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவரம் குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.

பரபரப்பான சூழலிலும் பல்வேறு தரப்பினரும் ஜெனிவாவில் முகாமிட்டுள்ள நிலையிலும் இலங்கை தொடர்பான முதலாவது விவாதம் இன்று(16.03.2018) நடைபெறுகிறது.

ஜெனிவாவில் இம்முறை இரண்டு விவாதங்கள் இலங்கை தொடர்பில் நடைபெறவுள்ள நிலையிலேயே முதலாவது விவாதம் இன்று இடம்பெற ஏற்பாடாகியிருக்கிறமை குறிப்பிடதக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்