ரஷ்யா பயணமானார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரஷ்யாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன.

எனினும், இந்தப் பயணம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதேவேளை, இழுபறிக்குள்ளாகியிருக்கும், ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட் 5.1 ரக போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்தவே, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ரஷ்யா சென்றிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்டர்புடைய செய்திகள்
ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன்
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா

About இலக்கியன்

மறுமொழி இடவும்