கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பரந்தன் வீதியில் கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முறிகண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து, பேருந்து நிலையத்தில் நிறுத்தபட்டு பயணிகள் ஏறிய பின்னர் புறப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் ஓடி சென்று பேருந்தில் ஏற முயற்சித்து முயற்சி தவறி கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த நபர் மீது பேருந்தின் பின் பக்க சக்கரங்கள் ஏறியதில் படுகாயமடைந்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு 7.15 அளவில் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி கிருஷ்ணப்புரத்தை சேர்ந்த சேர்ந்த 23 வயதான ஜேசுமன் டசீகரன் என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக தனியார் பேருந்து சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
இறையாண்மை கொண்ட நாடு என்ற சிறிலங்காவின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும், மதிக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச
மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
யாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர், காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவில்

About இலக்கியன்

மறுமொழி இடவும்