சாவகச்சேரி நகர முதல்வர் பதவியும் கூட்டமைப்பு வசமானது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை வென்ற சாவகச்சேரி நகரசபையின் முதல்வர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

இன்று பிற்பகல் நடந்த அமர்வில், மாநகர முதல்வர் பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சிவமங்கை இராமநாதனின் பெயரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யோகேஸ்வரன் ஜெயக்குமரனும் போட்டியிட்டனர்.

இதில், 12 வாக்குகளைப் பெற்ற சிவமங்கை இராமநாதன் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார். யோகேஸ்வரன் ஜெயக்குமரன் 6 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.

பிரதி முதல்வர் பதவிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்திய அருணாசல பாலமயூரன் தெரிவு செய்யப்பட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்