கூட்டமைப்பிற்குள் அதிருப்தி! சிவாஜிலிங்கத்தின் வலது கை சதீஸ் புறக்கணிப்பு?

வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் தேர்வில் ஒட்டுக்குழுக்களுடனும் , சிறிலங்கா அரசு கட்சிகளுடனும் கூட்டு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அதிருப்தி கிளம்பியுள்ளது.

நகரசபையின் முன்னாள் பிரதி தலைவர் சதீஸ், அதிருப்தியடைந்து, முதலாவது அமர்வை புறக்கணித்துள்ளார்.

இம்முறையும் பிரதி தலைவர் பதவியை அவர் எதிர்பார்த்திருந்தார். எனினும், கடந்த நிர்வாகத்தில் இருந்தவர்களை பொறுப்பான பதவிக்கு நியமிக்க கூடாதென பிரதேச மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், இம்முறை அவர் நியமிக்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியடைந்துள்ளார்.

சிவாஜிலிங்கத்தின் வலது கையாக செயற்பட்டு வந்தவர் சதீஸ். வல்வெட்டித்துறை நகரசபை விவகாரத்தை கவனித்து வந்த சிவாஜிலிங்கம், தன்னை புறக்கணித்து விட்டார் என சதீஸ் அதிருப்தியடைந்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரும் அதுபோன்றே விடுவிக்கப்பட வேண்டும் என்று
மட்டக்களப்பு வாகரை பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப் பெண்ணின் கணவரை கைதுசெய்துள்ளதாக வாகரை பொலிஸ்
வாக்கு வங்கிக்கு பாதகமான விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒருபோதும் செய்யாது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*