புத்தாண்டிற்கு வருவாரா எங்கள் அப்பா?

எங்கள் அப்பா வருகின்ற சித்திரைப்புத்தாண்டிற்கு எங்களுடன் இருப்பார்.ஜனாதிபதி மாமா அவரை எங்களிடம் சேர்ப்பிப்பார் என நம்பியிருப்பதாக அரசிய கைதியான ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும் தெரிவித்துள்ளனர்.

தமக்காகவும் தந்தையின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தவர்களிற்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர்கள் தமது பேர்த்தியார் மற்றும் இளைஞர் அமைப்பு பிரதிநிதிகள் சகிதம் யாழ்.ஊடக அமையத்திற்கு வந்திருந்தனர்.

நாங்கள் ஜனாதிபதி மாமாவை சந்தித்து எங்களது அப்பாவினை விடுதலை செய்து உதவுமாறு கோரியிருந்தோம். அவரும் சித்திரை மாதத்தினுள் அப்பாவை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே வடக்கு கிழக்கை சேர்ந்த இளைஞர் அமைப்புக்கள் மும்முரமாகச் செயற்பட்டு மக்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பங்கள் சகிதம் ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளையும் அழைத்து சென்று ஜனாதிபதி மைத்திரியிடம் மனுவை கையளித்திருந்ததாக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்த பிரதிநிதியொருவர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.அதிலும் கிழக்கிலுள்ள உறவுகள் ஒன்று திரண்டு குறுகிய காலத்தினுள் 50ஆயிரம் ஒப்பங்களை பெற்று தம்முடன் இணைந்து ஜனாதிபதியிடம் வருகை தந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

உண்மையில் வடகிழக்கை சேர்ந்த இளைஞர் அமைப்புக்கள் தாமாக ஒருங்கிணைந்து மக்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.

ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக தமிழ் அரசியல்வாதிகள் எவரும் குரல் கொடுக்காத நிலையில் இளைஞர் அமைப்புக்கள் மும்முரமாகச் செயற்பட்டு வந்திருந்தன.அவை அரசதலைவரைச் சந்தித்து மனு ஒன்றை கையளித்துமிருந்தன.
ஜனாதிபதி மனுவை பெற்றுக்கொண்டு ஆனந்த சுதாகரகானை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்த போதும் எப்போது என தெரிவித்திருக்கவில்லையென தெரிவித்ததுடன் இந்நடவடிக்கைகள் எதற்கும் அரசியல் கட்சிகளிற்கும் தொடர்பில்லையென தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்