மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் திறனாளிகளாவோம்!…

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் திறனாளிகளாவோம்!….

எங்களுக்கு கண்களில்லை. அழமுடியவில்லை. எங்களுக்கு கைகள் இல்லை. கையேந்தவும்முடியவில்லை. எங்களுக்கு கால்கள் இல்லை. புதிய பாதையில் நடக்கமுடியில்லை. பசிக்கிறது.அடுத்தவேளை என்ன செய்வது என்றே தெரியல. எங்கட பிள்ளைகளையாவது கைவிட்டிடாதீங்க! நித்தம் எமக்கு கிடைக்கும் ஒவ்வொரு உள்ளக்குமுறல்களோடு ஒரு கணப்பொழுதில்….. புலம்பெயர்பெயர்ந்தவர்களின் உதவிகள் பலருக்கு கிடைக்கிறது. ஆனால் போதிய அளவில் கிடைக்கவில்லை

போரால் படுகாயங்களுக்குள்ளாக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் பல இன்றளவும் இன்னல்களோடு வாழ்க்கையை கொண்டு செல்வது அனைவருக்கும் தெரியும். போர் முடிந்த பின்னர் பலரில் படித்த அல்லது சுயதொழில் தெரிந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றோர் தங்கள் வாழ்க்கைதரத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

தொடர்ந்து உதவிதேவைப்படுபவர்கள் என்ற பகுதிக்குள் மாற்றுத்திறனாளிகளின் நிலை மிகவும் கவலைதருவதாக இருக்கின்றது. அவர்களின் பிள்ளைகளுக்காவது நாங்கள் மாற்றம் ஏற்படுத்தும் திறனாளிகளாக மாறவேண்டும் என்ற எண்ணத்தில் வன்கூவர், ரொறொன்ரோ வாழ் நட்புகளின் சிறுதுளிகளில் ஒரு தொகுதி பொருட்களினை எமது சார்பில் சமூக சேவையாளர் செல்வநாயகம் அவர்களால் கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (வழங்கப்பட்டுள்ள புகைப்படங்களை பதிவேற்றியுள்ளேன்.) மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளின் கல்விதேவைக்காக வழங்கப்பட்டுள்ள இத்தொகுதி பொருட்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு ஒப்படைக்கப்படும். இதை ஒரு விளம்பரமாக எடுத்துக்கொள்ளாமல் தயவுடன் வேண்டுகோளாக எடுத்துக்கொள்ளுங்கள்…

புலம்பெயர்ந்த பலர் உதவி செய்ய மனம் இருந்தும் யாருக்கு எங்கே கொடுப்பது என்று தெரியாமல் இருப்பீர்கள். மாற்றுத்திறனாளிகளின் காப்பகத்தில் நீங்கள் நேரடியாகவே தொடர்பு கொண்டு கொடுக்கலாம்;. அப்படிசெய்யும் போது உங்களுக்கும் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். “சத்தியமா! எங்களால முடியல!

6 ஆண்டுகளாக நாங்களும் வேலைக்கு போறம். எங்களுக்கும் பசிக்கும். ஒருவேளை சாப்பிட்ட நாட்கள் தான் அதிகமாக இருக்கும். “வடிவா சாப்பிடலாம் என்று எங்களுக்கும் விருப்பம் தான். அப்படி சாப்பிட்டாதான் கொஞ்சமாவது மிஞ்சிறதை இப்படி கொடுக்ககூடியதாக இருக்கிறது.” ஊருக்கு பல குடும்பங்கள் வெளிநாடுகளில் இருந்து போய்வாறிங்கள்! உதவி செய்கிறீர்கள் என்று தெரியும்.

ஆனால் இவர்களை மாதிரி உள்ளவர்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுகிறது. கிளிநொச்சியில் ஒரு மணித்தியாலயம் நேரத்தை செலவழியுங்கள். இவர்களோடு கொஞ்சம் பேசுங்கள். ஆறுதலடைவார்கள். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலும் இவ்வாறு இருக்கின்றார்கள். இவர்கள் உங்களுக்காக தானே கை கால்களை இழந்தார்கள். இருட்டில் வாழும் இவர்களுக்கு கொஞ்சம் ஒளியேற்றுங்கள்! உங்கள் ஆறுதலான பேச்சுக்களும் அரவணைப்புக்களும் நிச்சயம் அவர்களின் தன்னம்பிக்கை உயர்வாக்கும்

ஊடகவியலாளர் சுரேன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து

 

தொடர்டர்புடைய செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த கல்லூரி மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்திலிருந்து சென்னைக்கு
நெடுத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களது மூன்று
மீண்டும் தெற்கிலிருப்பவர்கள் கறுப்பு ஜீலை பற்றி பேசுவது மக்கள் பிரதிநிதிகளிற்கான பண்பு அல்லவென டெலோஅமைப்பின் செயலாளர் நாயகம் சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

*