நம்பிக்கையில்லா பிரேரணையில் சிவசக்தி ஆனந்தனின் வாக்கு யாருக்கு? – முடிவெடுப்பாராம் சுரேஸ்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பாக, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனே முடிவு செய்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 16 உறுப்பினர்களில், ஒருவர் சிவசக்தி ஆனந்தன்.

கூட்டமைப்பை விட்டு ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள நிலையில், சிவசக்தி ஆனந்தனின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து அவர் கருத்து வெளியிடுகையில், “ இந்த அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆண்டுகளாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது.

ஆனாலும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எமது கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் முடிவு எடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
13 அம்சக் கோரிக்கைகளை உதாசினம் செய்து பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் மக்களை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கியுள்ளது என்று வடக்கு கிழக்கு
முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தமிழ் மக்கள் கூட்­டனி என்ற புதிய அர­சியல் கட்சி ஒன்­றினை ஆரம்­பித்­துள்ள நிலையில் புதிய கட்­சி­யுடன்
மைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இதுவரை வழங்கிய ஆதரவினால் தமிழ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்