வவுனியாவில் ரயிலில் மோதுண்டு 17வயது பாடசாலை மாணவன் பலி

கொழும்பு – யாழ் ரயிலில் மோதுண்டு வவுனியாவில் 17வயதுடைய பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 3.30மணியளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கற்குழியில் வசித்து வரும் பாடசாலை மாணவனான எஸ். சுபலோசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த தினம் குடும்பதாருடன் சிறு கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு வீட்டை வீட்டு வெளியேறி சென்றுள்ளார். பின்னர் வவுனியா, தேக்கவத்தை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் புகையிரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர்நேற்று
தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால்
சீனாவில் தயாரிக்கப்பட்டு, சிறிலங்காவில் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆறு புத்தம் புதிய பி.ரி-6 பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*