காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை வன்னியில் சந்தித்த நடிகர் கருணாஸ்!

தென்னிந்திய திரைப்பட உலகின் நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்றையதினம் (06-04-2018) கிளிநொச்சிக்கு வருகை தந்து அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இது தொடர்பாக தான் தமிழக சட்டமன்றத்தில் எடுத்துரைக்கவுள்ளதாக நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.ஈழ தமிழ் மாணவர்களுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை கட்டவுள்ள தென்னிந்திய நடிகர் கருணாஸ், இன்றையதினம் (06-04-2018) யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்தித்து பேசியிருந்தார். இதன்போது புதிய பல்கலைக்கழக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வருமாறு முதலமைச்சரை கருணாஸ் அழைத்துள்ளார். இந்நிலையில் வடக்கு முதலமைச்சருடனான சந்திப்பை அடுத்து  நடிகர் கருணாஸ் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு 413 நாட்களாக கவனயீா்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வடக்கு கிழக்கில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் இருந்து
காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் வடமராட்சி கிழக்கு மக்களின் போராட்டம் ஓராண்டைக் கடக்கிறது. வடமராட்டசி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின்
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலகத்தை தாம் புறக்கனித்த நிலையில் யாருக்காக அலுவலகம் செயற்பட போகின்றது என முல்லைத்தீவில் காணாமல்

About இலக்கியன்

மறுமொழி இடவும்