முல்லைத்தீவில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் வயோதிபர் கைது!

முல்லைத்தீவு சிலாவத்தை தியோ நகர் பகுதியில் உறவினர்களுடன் வாழ்ந்து வந்து சிறுமி மீது வயோதிபர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல்தொந்தரவு கொடுத்துவந்துள்ளதாக சிறுமியின் உறவினர்களால் முல்லைத்தீவு சிறிலங்கா காவல்துறை நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 05.04.18 மாலை குறித்த 73 அகவையுடைய வயோதிபரை கைதுசெய்துள்ளதுடன் 08 அகவை சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவ மனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து முல்லைத்தீவு சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவருடன் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான வயோதிபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முல்லைத்தீவு சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட
முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்