வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் பதவியேற்பு

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் நாளையதினம் பொறுப்பேற்கிறார்.வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஆன்மீக சுற்­றுப்­ப­யணம் ஒன்­றை மேற்கொண்டு இன்றையதினம் தமி­ழகம் பயணமாகிறார்.

அவர் இரண்டு வாரங்களுக்கு அங்கு தங்­கி­யி­ருப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.இந்த நிலையில் வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் நாளை பதவியேற்கிறார்.பத்திரமுல்லவில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில் நாளைக் காலை 10.30 மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே முன்னிலையில் க.சர்வேஸ்வரன் பதவியேற்கிறார்.

தொடர்டர்புடைய செய்திகள்
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று
இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு "United States of India" என மதிமுக பொதுசெயலர் வைகோ
இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்

About இலக்கியன்

மறுமொழி இடவும்