விக்னேஸ்வரனுடன் இணையுமா ஈபிஆர்எல்எவ்?-சுரேஸ் பதில்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே, அவருடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஈபிஆர்எல்எவ் தீர்மானிக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சி ஒன்றின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான, பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இது தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கருத்து கேட்டிருந்தது.

அதற்கு அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ளதால், ஒன்றுபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்கும் விருப்பத்தை முதலமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும், அவருடன் ஈபிஆர்எல்எவ் இணைந்து கொள்ளுமா என்பது, முதலமைச்சர் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதிலேயே, தங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப்
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸுக்கு
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்றித்தருமாறு கோரி தமிழ் மக்கள் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கையை வலியுறுத்தி

About இலக்கியன்

மறுமொழி இடவும்