சுவிசில் நடைபெற்ற நினைவெழுச்சி நாள்!

இலங்கை, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பினை எதிர்த்து உண்ணாநோன்பிருந்து தேசத்தின் விடுதலைக்காக மூச்சுக் கொடுத்த தியாகச்சுடர் அன்னை பூபதி அம்மா அவர்களின் 30வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் அனைவரினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 21.04.2018 சனிக்கிழமை அன்று கிளாறூஸ் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களுக்குரிய ஈகைச்சுடரினைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களுக்கு தனித்தனி ஈகைச்சுடர்களாக ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

தேசிய விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்தவர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வில் அரங்கம் நிறைந்த கிளாறூஸ் மாநில வாழ் தமிழ்மக்கள் கலந்து கொண்டதுடன், காணிக்கை நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் இன உணர்வு மிக்க எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள், கவிதைகளும் இடம்பெற்றதுடன் அன்னைபூபதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் வகையிலான உணர்வுவெளிப்பாடும்É இசைக்குயில் 2018 நிகழ்வில் பாலர்பிரிவில் முதலாமிடம் பெற்றுக் கொண்ட மாணவர்கள் வழங்கிய நிகழ்வும் கலந்துகொண்டவர்களின் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

ஈழத்தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத வலியாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிடப்பட்டும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனப்பேரழிப்பு மே18- முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு நாளின் 9வது ஆண்டு வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து எம் மாவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தி உணர்வுடனும்,உறுதியுடனும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க 18.05.2018 வெள்ளிக்கிழமை பேர்ண் பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடத் தயாராகுமாறு இத்தருணத்தில் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

தொடர்டர்புடைய செய்திகள்
உரிமைக்காக போராடிய தமிழர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று கூறிய கூத்தாடி ரஜினிக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக தமிழர் தாயகத்தின்
தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் அன்று மட்டக்களப்பில் மண்முனைப்பற்றிலமைந்துள்ள கிரான்குள விஸ்ணு வித்தியாலயத்தில் உள்ள
ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தினை புறக்கணிக்க தமிழ் மக்கள் வாழுமிடங்களெல்லாம் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் யாழிலும் அத பரவியுள்ளது.யாழில் சுவரொட்டிகளை

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*