எவ்வாறு சிங்கள-தமிழ் தேசிய கூட்டமைப்பு-உலகதமிழ் பேரவை முன்னணி உருவானது (2009) ? (பகுதி 1)

போருக்குப் பின்னர், குறிப்பாக பான் கி மூன் இலங்கைக்கு விஜயம் செய்து, போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு கூறுதல் அவசியம் என வலியுறுத்தினார்.

இனப் போருக்குப் பின்னர் உலக ஒழுங்குமுறை மத்தியிலிருந்து அரசியல் அதிகாரங்களை பறித்து பாதிக்கப்படட இனத்திட்க்கு சுய ஆட்சி (con-federation) அல்லது தனி நாடு உருவாக்குவது ஆகும். உதாரணமாக, போரின் பின்னர் போஸ்னியா, கொசோவோ, கிழக்கு திமோர், தென் சூடான் ஆகிய நாடுகள் சுய ஆட்சி அல்லது தனி நாடு நிலைமை கொண்டது குறிப்பிடத்தக்கது.

இது பிரிவினை விரும்பாத சிங்களவர்களை பயமுறுத்தியது.

இதனால் கண்டியில் தலதா மாளிகையில் கட்சி அல்லது சாதி பேதமமின்றி சிங்களவர்கள் ஒன்று கூடினார்கள். இதில் ஐ.தே.கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களும், மகா சங்க பிக்குகளும், சிங்கள அறிவுஜீவிகளும், சிங்கள செல்வந்தர்களும் மற்றும் பிரபலிய அரசியல் வாதிகளும் பங்கு பற்றினார்கள்.

இந்த சிங்களவர்கள் எடுத்த முடிவுகள் பின்வருமாறு:

1.சர்வதேசத்தினால் எதிர்காலத்தில் சாத்தியமாகக்கூடிய போர்க் குற்றங்களை நிறுத்தி, நாட்டை பிளவுபடுத்துவததையும் நிறுத்துவதற்க்கு

அவசர திட்டங்களை வரைவதன் முக்கியம் பற்றி கலந்து ஆலோசித்தார்கள்.
1. தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் ஒன்றாக வாழ முடியும் என்று உலகிற்கு ஒரு நிலையை (Optics) உருவாக்குவது பற்றி அவர்களின் கருத்துக்கள் பரறிமாறப்பட்ட்து.
2. சிங்கள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தோர் கொண்ட முன்னனியை உருவாக்குதலின் லாபம் பற்றி கருத்து பரி மாறப்பட்டது. இந்த முன்னனியை எப்படி பாவிப்பது பற்றியும் முடிவெடுத்தார்கள்:
3. இலங்கையிலும் மேற்குலகிலும் யுத்தம் முடிவு பெற்ற பின்னர் சிங்களவர்களும் தமிழர்களும் கருத்து வேறுபாடின்றி வாழுகிறார்கள் என்று ஒரு விம்பத்தை (image) உருவாக்குவது.
4. இந்த முன்னணி மூலம், அரசியல் தீர்வில் மற்றும் எதிர்காலத்தில் சாத்தியமான எந்தவிதமான யுத்தக் குற்றம் ஆகியவற்றிலிருந்து அமெரிக்க தலையீட்டை நிறுத்துவைத்து.
5. போர்க்குற்றங்கள் மற்றும் அரசியல் தீர்வைவுகளை உள்நாட்டில் தீர்ப்பதர்க்கு உலக நாட்டை சம்மதிக்க வைப்பது .

ரணிலும் சந்திரிக்காவும் த. தே . கூடடணியை தமக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்வதற்கு திடடம் தீட்டி சம்பந்தனை சந்தித்து நடைமுறை படுத்துவதாய் பொறுப்பு எடுத்தார்கள். எனவே, தமிழ் தேசியக் கூட்டமைபை சிங்களத் திட்டத்துக்கு மறை முகமாக உதவ செய்வது

அடுத்த கட்டுரையில் சிங்களவர்கள் தமது திட்டத்தை எப்படி தமது இலக்குகளை நோக்கி கொண்டு சென்றார்கள் என்பதை அவதானிப்போம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்