முதலமைச்சரின் வழி தனிக்கட்சியா?

இலங்கைக்கு திரும்பியுள்ள வடமாகாண முதலமைச்சரின் நகர்வுகள் அனைத்து மட்டங்களிலும் தற்போது பெறுமதி வாய்ந்ததொரு கேள்வியாகியுள்ளது.
தற்போது கொழும்பில் தரித்திருக்கும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனித்து கட்சியொன்றினை பதிவு செய்ய முற்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணமிருந்தன.

இரு மாகாணசபை உறுப்பினர்களை உள்ளடக்கி தேர்தல் திணைக்களத்தில் புதிய கட்சியொன்றை பதிவு செய்ய முற்படுவதாக ஒரு தகவலும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்சியொன்றின் பெயரை மாற்றியமைக்க முற்படுவதாகவும் செய்திகள் கசிந்தவண்ணமேயிருந்தது.

இதனிடையே அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களது பாரியார் இயற்கை எய்தியிருந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் தொலைபேசி வழி தொடர்புகொண்டு தனது அனுதாபங்களை பகிர்ந்து கொண்டதாக தெரியவருகின்றது.
நாளை மறுதினம் வியாழக்கிழமை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களது பாரியாரது இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளது.

அதனால் அன்றைய தினம் கூடவிருந்த வடமாகாணசபை அமர்வு கேள்விக்குறியாகியுள்ளது.
அன்றைய அமர்வில் மீண்டும் ஊழல்குற்றச்சாட்டுக்களினை தோண்டி முதலமைச்சரிற்கு தலையிடி கொடுக்க திட்டங்கள் தமிழரசினால் போடப்பட்டிருந்தது.ஆனால் அது தற்போது தடைப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்