இருட்டுமடு கிராமத்தில் சட்டவிரோதமாக அழிக்கப்படும் காடுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் கிராம அலுவலர் பிரிவின் இருட்டுமடு கிராமத்தில் ஆற்று வாய்க்காலிற்கு மேல் பக்கமாக பல ஏக்கர் காடுகள் சட்டவிரோதமான முறையில் கனரக இயந்திரங்களின் உதவியோடு அழிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கண்டும் காணாதது போல் இருப்பதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வட தமிழீழம் , முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் கிராம அலுவலர் பிரிவின் இருட்டுமடு கிராமத்தில் ஆற்று வாய்க்காலிற்கு மேல் பக்கமாக பல ஏக்கர் காடுகள் சட்டவிரோதமான முறையில் கனரக இயந்திரங்களின் உதவியோடு அழிக்கப்படுகின்றன எமது சுதந்திரபுரம் கிராமத்தில் உள்ள சிரட்டைபறிச்சான் குளம் இந்த இடத்துக்கு அருகிலேயே உள்ளது. ஆனால் இதன்கீழ் உள்ள அனுமதிப்பத்திரம் வயல் நிலங்களை செயகைபண்ண பலதடவைகள் அபிவிருத்தி குழு கூட்டங்களில் கலந்துரையாடி கூட தீரவில்லை இவ்வாறிருக்க பாரிய மரங்களுடன் கூடிய பல ஏக்கர் காடுகளை கனரக இயந்திரங்கள் கொண்டு இடித்து அழிக்கும் போது அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது சந்தேகம் அளிப்பதாக மக்கள் தெரிவிப்பதோடு இந்த காடளிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மக்களால் வடமாகாண சபை உறுப்பினர் ஆ புவனேஸ்வரன் அவர்களுக்கு முறையிடப்பட்டத்தை அடுத்து குறித்த இடத்தை பார்வையிட்ட உறுப்பினர் ஊடகத்துக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். சுதந்திரபுரம் கிராமசேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட இருட்டுமடுகிராமத்திற்கு அண்மிய காட்டுப்பகுதியில் மூங்கிலாற்றின் நிலப்பரப்பில் ஆத்தோரங்களில் இருக்கக்கூடிய காடுகள் இனம் தெரியாவர்களினால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்த கிராம மக்கள் கடந்த 05 ஆம் திகதியில் கனரக இயந்திரங்கள் கொண்டு சட்டவிரோதமான முறையில் யாரோ காடு அழிக்கின்றார்கள் என்று முறைப்பாடு செய்துள்ளார்கள் அந்த முறைப்பாட்டிற்கு அமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலருடன் தொடர்பு கொண்டு கேட்டேன். அது தொடர்பில் தனக்கு எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் இன்னிலையில் அடுத்த 7ஆம் திகதி பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளேன். குறித்த பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு இடம்பெறுவதால் உரியமுறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன் இந்த பகுதியில் சிறைட்டைபறிச்சான் என்கின்ற சிறியகுளம் அமைந்துள்ளது.

அந்த குளத்திற்குகீழ் விவசாயிகள் ஒரு தொகுதியினைர் வயல் செய்துவருகின்றார்கள் 2009 ஆம் ஆண்டின் பின்னர் அந்த பகுதியில் ஒருபகுதி காடாகி விட்டது அந்த காட்டுப்பகுதி அண்மித்த பகுதியிலும் காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த மக்களின் காணிகளுக்கான அனுமதிப்பத்திரம்கூட இருக்கின்றது அந்த மக்கள் காடுகளைஅகற்ற வனவளபாதுகாப்பு பிரிவினர் தடையாக இருக்கின்றார்கள்.இவ்வாறு இருக்கும் போது இந்த இடத்தில் 15 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இடிக்கப்பட்டுள்ளன இதனால் பெரிய மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன சிறிய ஆறுகள் மூடப்பட்டுள்ளன. இது அரச அதிகாரிகள் மற்றும் வனவளதிணைக்கழத்தின் ஒத்துளைப்புடன்தான் நடைபெறுகின்றது அவர்களின் ஒத்துளைப்பு இல்லாமால் இது நடைபெறாது. வனவளபாதுகாப்பு பிரிவினர் சொந்த நிலங்களில் மரங்களை வெட்டுவதற்கு கூட தடையாக இருக்கின்றார்கள் இதற்குள் ஊழல் நடக்கின்றதாக அல்லது வேறுயாரும் அனுசரணையாக இருக்கின்றார்களா என்ற கேள்வி எழும்புகின்றது. இந்த பகுதியில் வாழ்கின்ற மக்கள் பலர் வயல்காணி இல்லாதவர்களாக இருக்கின்றார்கள் இவர்கள் இந்த இடங்களை அழிக்கமுடியம் என்றால் அந்த இடங்களில் காணிகள் அற்றவர்களுக்கு ஒவ்வொரு ஏக்கர் படி வயல்காணிகள் வழங்கப்படவேண்டும் இவ்வாறு காடுகளை அழிக்கமுடியும் என்றால் மறுபக்கத்தில் சிறைட்டைபறிச்சான் குளத்தின் கீழ் அனுமதிப்பத்திரத்துடன் இருக்கின்ற காணிகளில் காடுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எதிர்வரும் நாட்களில் நடைபெறும் பிரதேச ஒருங்கிணணைப்பு கூட்டத்தில் இதுதொடர்பில் தெரிவிக்கவுள்துடன் இது தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என்றும் நான் கோருகின்றேன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்