திரும்பினார் வடக்கு முதலமைச்சர்:தயாராகிறார் நினைவேந்தலிற்கு!

வடமாகாண முதலமைச்சர் நீண்ட விடுப்பின் பின்னர் இன்று தனது கடமைகளிற்கு திரும்பியுள்ளார்.தன்னை சந்திக்க வந்திருந்த பொதுமக்களினை சந்தித்த அவர் ஜநா மனிதநேய உதவி அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்துப்பேச்சுக்களினை நடத்தியிருந்தார்.

தனது அரசியல் அடுத்து கட்ட அரசியல் நகர்வு பற்றிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்ட பின்னர் அவர் இந்தியாவிற்கான ஆன்மீக விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

பின்னர் கொழும்பு திரும்பியிருந்த அவர் மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.

இதனிடையே எதிர்வரும் 7ம் திகதி திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான ஏற்பாட்டு கூட்டமொன்றிற்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

வுடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிற்கு நினைவேந்தல் கூட்ட ஏற்பாடுகள் பற்றி ஆராய முதலமைச்சர் அழைப்புவிடுத்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்