இந்தியாவில் சுப்பிரமணியசுவாமி:இலங்கையில் சுமந்திரன்

இந்தியாவில் சுப்பிரமணிய சுவாமியை ஜோக்கர் என அழைப்பது போன்று இலங்கையில் ஏம்.ஏ,சுமந்திரன் தோன்றியிருக்கின்றார்.நேற்று சொன்னதை இன்று அவ்வாறு சொல்லவில்லையென்கிறார்.தனக்கு தொடர்பில்லாதவற்றை பற்றி கருத்து சொல்லி சுப்பிரமணிய சுவாமி போல மண்டையை உடைத்துக்கொள்கிறாரென கூட்டமைப்பின் முன்னாள் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்வதே ஊடக சுதந்திரத்தை முன்னிட்டு யாழ்.ஊடக அமையத்தால் நடாத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது அரசியல் தரப்பினை சார்ந்தவர்களது ஊடகங்கள் பல வெளிவருகின்றன.ஆனால் அவை உரிமையாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொல்வதையே வெளிப்படுத்துகின்றன.

அதனை விடுத்து மேலும் சிலர் வேறு ஆட்களின் பெயரில் வார இதழ்களை அச்சிட்டு வெளியிட்டுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஊடகவியலாளர்கள் 40 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.நல்லாட்சி என சொல்லிக்கொள்ளும் இந்த அரசு ஊடக கொலைகள் பற்றி வாயே திறக்காதிருக்கின்றது.அதற்கு முண்டுகொடுத்துக்கொண்டிருப்பவர்கள் இப்போது ஊடகங்களைப்பார்த்து கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

நீங்கள் புலிகளை பார்த்து கேள்வி எழுப்பியிருந்தீர்களா?மஹிந்தவை பார்த்து கேள்வி எழுப்பியிருந்தீர்களா? அப்போதெல்லாம் இப்படி எழுத முடியுமாவென கேட்கின்றார்.

எனக்கு தனிப்பட்ட சுமந்திரனுடன் முரண்பாடில்லை.கூட்டமைப்பின் பேச்சாளராக உள்ள அவரது கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை.

அவர் தமிழ் ஊடகவியலாளர்களை பின்புறமாக நடக்கவும் சொல்கின்றார்.பகிரங்கமாக அச்சுறுத்தலும் விடுக்கின்றார்.

கொழும்பிற்கு அடுத்து இலங்கையில் ஊடகத்துறை வலுவாக உள்ளது யாழப்பாணத்திலேயே.

ஆனாலும் எமது ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எமது பிரச்சினைகளை ஆங்கில மற்றும் சிங்கள வடிவில் தெற்கிற்கும் சர்வதேசத்திற்கும் கொண்டு செல்லவேண்டும்.

இதனை செய்ய புலம்பெயர் உறவுகள் முன்வரவேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்