கூட்டமைப்பு பாதுகாப்பில் மதுபானசாலை!

பருத்தித்துறை நகர்ப்பகுதியில் இலங்கை காவல்துறை மற்றும் கூட்டமைப்பு சார்பு நகரசபையின் ஆதரவுடன் இயங்கிவரும் மதுபான சாலையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நகரசபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக பல வருடங்களாக இயங்கிவருவதைக் கண்டித்தும் குறித்த மதுபானசாலையை அகற்றுமாறு கோரியும் இன்று காலை பருத்தித்துறை நகரசபை முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த மதுபானசாலையானது பருத்தித்துறை சிவன் கோவிலில் இருந்து 50மீற்றர் தூரத்திலும் வேலாயுதம் மத்திய மகாவித்தியாலத்திலிருந்து 300 மீற்றருக்கும் குறைவான தூரத்திலுமாக அமைந்துள்ளது.

மதுபானசாலையினை அகற்றுமாறு கோரி பல வருடமாக பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் பல தடவைகள் போராட்டங்களை நடத்தியுள்ளனர் .ஆனாலும் அரசியல் பின்னணி மற்றும் பணபரிமாற்றம் போன்ற சட்டவிரோத நடவடிக்கை காரணமாக இம்மதுபானசாலை தொடர்ந்தும் இயங்கிவருகிறது என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தற்போது கூட்டமைப்பு வசமுள்ள பருத்தித்துறை நகரசபை குறித்த மதுபான சாலையினை காப்பாற்ற முற்பட்டுள்ளநிலையில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை நகரசபை உறப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடாத்தியிருந்ததாக தெரியவருகின்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ் மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் இரண்டாவது தடவையாக இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. சபைநிதியை முறைகேடாக கையாள்வது உட்பட தொடர்ச்சியாக பல
2012-ல் இந்தியாவை மட்டுமல்லாது உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கும் 4 பேரும்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் நால்வர் சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப்

About இலக்கியன்

மறுமொழி இடவும்