திடீரென விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடும் கடற்படை!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கபட்டதாக சந்தேகிக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை தேடும் பணியில் ஸ்ரீலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை கடற்படையின் கொழும்பு அலுவலகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அனுராதபுரம் பூனாவ கடற்படைமுகாமைச் சேர்ந்த கடற்படையினரே இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா கூமாங்குளம் நூலக வீதியில் உள்ள சின்னம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள தனியார் காணியிலேயே குறித்த தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இன்று காலையில் இருந்தே அப்பகுதியில் பொலிசார் காவல் கடமையில் ஈடுபட்டுவந்ததுடன் வவுனியா நீதிமன்றில், தேடுதல் மேற்கொள்வதற்கான அனுமதியை பெற்ற பின்னர் மாலை 4.30 மணியளவில் நிலத்தை தோண்டும் செயற்பாடுகள் மேற்கொள்ள பட்டுவருகிறது.

அடையாளபடுத்தபட்ட ஒரு பகுதியில் மாலை 7 மணிவரை 10 அடி ஆளம் வரைக்கும் தோண்டியும் எந்த பொருட்களும் கிடைக்காத நிலையில் பரந்த அளவில் காணியினுடைய ஏனைய பகுதிகளும் இயந்திரத்தால் தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தின் மூலம் அப்பகுதி மக்களிடையே ஒருவித அச்சமான நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்