குடும்பத்தினருடன் முன்னாள் போராளிகள்!

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நெருங்கிவரும் நிலையில் சிங்கள சிப்பாய் ஒருவர் விடுதலைப் புலிகள் இருவருக்கு இளநீர் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்து பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.பரபரப்பிற்கென சில தரப்புக்கள் இது தொடர்பில் ஊதிப்பெருப்பிக்க குறித்த புகைப்படம் இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

இப்புகைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடனும் இன்னுமொரு உறுப்பினர் சிவில் உடையுடனும் காணப்படுகின்றனர்.அவர்கள் இருவரும் தற்போது பாதுகாப்பாக தமது குடும்பத்தவர்களுடன் வன்னியில் உள்ளமை தெரியவந்துள்ளது.

புகைப்படத்தில் சிவில் உடையில் நிற்கும் போராளி தற்போது புனர்வாழ்வின் பின்னர் அரச திணைக்களமொன்றில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றிவருகின்றார்.சீருடையுடன் நிற்கும் போராளியும் விடுவிக்கப்பட்டு குடும்பத்தவர்களுடன் உள்ளார்.

யுத்த காலத்தில் தர்மபுரம் பகுதியில் படையினரது கட்டுப்பாட்டு பகுதியினுள் தவறுதலாக நுழைந்த நிலையில் படையினரால் அவர்கள் இருவரும் கைதாகியிருந்தனர்.

கைது சம்பவத்தை நினைவுகூர்ந்த அப்போராளிகளுள் ஒருவர் கைதான எங்களை தென்னையிலேற்றி இளநீர் பறித்த இராணுவத்தை மறக்கமுடியாதென தெரிவித்தார்.பின்னர் நாங்கள் பறித்த இளநீரில் ஒன்றை குடிக்கவும் தந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் காவல் துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள் உட்பட
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர்நேற்று

About இலக்கியன்

மறுமொழி இடவும்