தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு தமிழீழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

வலி சுமந்த வாரத்தில் தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு தமிழீழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு கண்காட்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. இக் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் மீது சிங்கள அரசால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற/ நடைபெறுகின்ற இனப்படுகொலைகளை ஆதாரபூர்வமாக காட்சிப்படுத்தி யேர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளது. அத்தோடு இக் கண்காட்சியில் கலந்துகொண்ட தமிழ் இளையோர் அமைப்பினர் வேற்றின மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து உரையாடல்களில் ஈடுபட்டனர்.

இக் கவனயீர்ப்பு கண்காட்சி தொடர்ச்சியாக ஏனைய நகரங்களிலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் காலை 10 மணிக்கு ஹம்பூர்க் நகரத்திலும் மாலை 16 மணிக்கு கண்ணோவர் நகரத்திலும் நடைபெறவுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்
இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை
ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று 

About இலக்கியன்

மறுமொழி இடவும்