தமிழின அழிப்புக்கு நீதி தேடி பயணிக்கும் ” பேசப்படாத உண்மைகள் “கவனயீர்ப்பு கண்காட்சி 5 வது நாளாக இன்றைய தினம் காலை Düsseldorf நகர மத்தியிலும் மாலை நேரம் Frankfurt நகர மத்தியிலும் இடம்பெற்றது.கண்காட்சியை பார்வையிட்ட பல்லின மக்களுக்கு யேர்மன்- மற்றும் ஆங்கில மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. நாளைய தினம் கவனயீர்ப்பு கண்காட்சி காலை Mannheim நகரத்திலும் மாலை Landau நகரத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

எம் இனத்தின் மரண ஓலத்திற்கான நீதியை தேடி பயணிக்கும் கவனயீர்ப்பு கண்காட்சி

