பிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த புலன்மொழி வளத்தேர்வு 2018

தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் வருடாந்தம் நடாத்தும் புலன் மொழி வளத்தேர்வு 2018, நேற்று (13.05.2018) ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்தது.

குறித்த தேர்வு கடந்த 05.05.2018 சனிக்கிழமை ஆரம்பமாகி இரண்டாவது நாளான (06.05.2018) ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே.
நேற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் காலை 7;.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் தேர்வுப்பொறுப்பாளர் திரு.அகிலன் தேர்வு தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி மண்டபப் பொறுப்பாளர்களிடம் தேர்வு வினாத்தாள்களை ஒப்படைத்தார்.

பிரான்சில் நேற்றையதினம் சீரற்ற காலநிலை மற்றும் தொடருந்து வேலை நிறுத்தம் இடம்பெற்ற நிலையிலும் மாணவர்கள் தேர்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பெரும்பாலான மாணவர்கள் கடந்த கால தேர்வுப் பட்டறிவுடன் மிகவும் திறமையாக தமது ஆற்றல்களை தேர்வில் வெளிப்படுத்தியதாகவும் பல மாணவர்கள் பேசுதல் பகுதியில் உணர்வுகளை வெளிப்படுத்தியதுடன் கண்ணீர்சிந்தி அழுதமை ஆசிரியர்களையும் கண்கலங்கவைத்ததாகவும் தேர்வில் கலந்துகொண்ட தமிழ்பள்ளி ஆசிரியர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.
இம்முறை பிரான்சில் Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 894 பேர் தேர்வுக்குத் தோற்றுவதுடன்; 260 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றிவருகின்றனர், 05.05.2018 சனிக்கிழமை 21 தேர்வு நிலையங்களிலும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை 18 தேர்வு நிலையங்களிலும் 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை 13 தேர்வு நிலையங்களில் புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற பிரிவுகளில் நடைபெற்று முடிந்துள்ளதாக தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரான்சின் வெளிமாவட்டங்களான Nice, Beau Soleil, Toulouse, Rennes, Tours, Gien, Strasbourg, Mulhouse, Pau, Bordeaux ஆகிய இடங்களிலும் குறித்த புலன்மொழித் தேர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழ்மொழி பொதுத் தேர்வு வரும் 02.06.2018 சனிக்கிழமை Nice, Beau Soleil, Toulouse, Rennes, Tours, Gien, Strasbourg, Mulhouse, Pau, Bordeaux என்ற முகவரியில் இடம்பெறவுள்ளது.

(ஊடகப்பிரிவு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

தொடர்டர்புடைய செய்திகள்
கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டின் இதே நாளில், கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை
சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின் நாடாளுமன்ற
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*