தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு ஸ்ராஸ்பூர்க் மாநகரில் கவனயீர்ப்பு.

முள்ளிவாய்க்கால் தமிழனப் படுகொலையின் 9ம் ஆண்டு நினைவுனாள் 18.05.2018 வெள்ளிக்கிழமை ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் பி.ப 3.00 மணி தொடக்கம் மாலை 5மணி வரை நடைபெற்றது.

இந் நிகழ்வில் 100க் கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.

பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.

சிறீலங்கா அரசினால் தொடர்ந்து நடாத்தப் பட்டு வருகின்ற தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தி நீதியைப் பெற்றுத் தரவும் அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரக்கோரியும் உள்ளடங்கிய மகஜர் ஐரோப்பிய ஆலோசனைச் சபையின் பொதுச் செயலரிடம் கையளிக்கப்பட்டதுடன் தற்போதய நிலைமையில் தமிழ் மக்களின் முக்கிய கடமை பற்றியும், தமிழீழத்தில் மக்கள் எழுச்சிகொண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவு கூர்ந்துள்ளதையும், புலம் பெயர்தமிழ் மக்களும், தாயக மக்களும், தமிழக மக்களும் ஒன்றிணைந்து போராடினால் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் திரு.ந. கிருபானந்தன் அவர்கள் உரையாற்றியிருந்தார்.

அருட்தந்தை ஜெரார்ட் அவர்கள் உரையாற்றுகையில் தமிழ் மக்கள் ஒற்றுமையாக அறவழியில் தொடர்ந்து போராட்டங்களை நடாத்தவேண்டும் எனவும் உரையாற்றியிருந்தார்.

இறுதியில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC

About இலக்கியன்

மறுமொழி இடவும்