முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது

சென்னை மெரினா கடற்கரையில், ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களை போலீஸ் கைது செய்து உள்ளது.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடந்த 7 ஆண்டுகளாக சென்னை மெரினாவில் மே 17 இயக்கம் நினைவேந்தல் நிகழ்வை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நினைவேந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், நினைவேந்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்து இருந்தார்.

அதன்படி, மாலை 4 மணியில் இருந்து ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். அவர்கள் மெரினாவில் சென்றுவிடாதபடி, போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

இருப்பினும் கூட்டம் அதிகரித்து வருவதால், போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நினைவேந்தலில் கலந்து கொண்டிருப்பவர்களைக் கைது செய்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வைப்பதற்கு போலீஸார் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களை போலீஸ் கைது செய்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்