முன்னாள் போராளியொருவர் இன்று மரணம்!

உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் சாவினைத் தழுவியுள்ளார்.

’உயிரிழை’ எனப்படும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் தன்னெழுச்சி அமைப்பின் நீண்டகால பயனாளியான இவர், கடந்த 1991ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினருடன் நடந்த நேரடி மோதலின் போது தனது முள்ளந்தண்டுப் பகுதியில் படுகாயமடைந்தார்.

அதன்பின்னர் இன்றுவரை இடுப்புக்கு கீழ் உணர்வில்லாமல் தனது வாழ்கையை பெரும் சவால்களுக்கு மத்தியில் கழித்து வந்த நிலையில் கடந்த 1999 ஆண்டு திருமணம் முடித்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய இவர் நீண்ட காலமாக அழுத்தப் புண் எனப்படும் படுக்கைப் புண்ணால் பாதிக்கப்பட்டு, அதன் பிடியில் இருந்து மீண்டு வரமுடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சைகள் பலனின்றி இன்றைய தினம் அகாலச் சாவினைத் தழுவியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்