சுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்!!!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் #திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இருபத்தியோராம் நூற்றாண்டின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான ஒன்பதாம் ஆண்டு நினைவுகள் சுமந்த கவனயீர்ப்பு நிகழ்வான, மே 18 – தமிழின அழிப்பு நாளானது 18.05.2018 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடாத்தப்பெற்ற இக் கவனயீர்ப்பு நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல்இ அகவணக்கத்துடன் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் சுவிசின் தொழிற்கட்சி சார்பில் பிரமுகர்கள்; கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன், சமகால அரசியல் தொடர்பான எழுச்சியுரையுடன், இளையோர்களால் வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி, ஆகிய மொழிகளில்; பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தன.

தமிழின அழிப்பு நாளினை முன்னிட்டு அனைத்துலகத் தொடர்பக வெளியீட்டுப்பிரிவினால் சிறப்பு வெளியீடாக வலிகளின் மொழி இறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், இனஅழிப்பு சார்ந்த துண்டுப்பிரசுரங்களும் வேற்றினத்தவர்களுக்கு இளையோர்களால் வழங்கப்பட்டதுடன் இனஅழிப்பு சார்ந்தும் தெளிவாகவும், விரிவாகவும் விளங்கப்படுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழின அழிப்பு சார்ந்த, தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் வகையிலான பதாதைகளைத் தாங்கிய சுவிஸ் வாழ் தமிழ்மக்கள்; தமது உணர்வுகளை ஆற்றாமையோடு வெளிப்படுத்தியதோடு நாம் அனைவரும் ஒற்றுமையாக தாயகம் நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதிமொழியுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து சுவிஸ் நாட்டின் கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் ஷவலிகளிலிருந்து வலிமை பெறுவோம்! உறுதி கொள்வோம்! உரிமை மீட்போம்!| என்ற உணர்வுடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

தொடர்டர்புடைய செய்திகள்
உரிமைக்காக போராடிய தமிழர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று கூறிய கூத்தாடி ரஜினிக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக தமிழர் தாயகத்தின்
தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் அன்று மட்டக்களப்பில் மண்முனைப்பற்றிலமைந்துள்ள கிரான்குள விஸ்ணு வித்தியாலயத்தில் உள்ள
ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தினை புறக்கணிக்க தமிழ் மக்கள் வாழுமிடங்களெல்லாம் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் யாழிலும் அத பரவியுள்ளது.யாழில் சுவரொட்டிகளை

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*