இன அழிப்பு இந்திய இராணுவத்தின் தூபிகளை புனரமைக்கும் ஸ்ரீலங்கா இராணுவம்

கோப்பாய் தெற்கு பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணு அதிகாரியுடைய சமாதி கல்லறை ஒன்றை 30 வருடங்களின் பின்னர் மீண்டும் புனரமைப்பதற்கான நடவடிக்கை இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த சமாதியை புனரமைப்பதற்கு 50 இற்கும் மேற்பட்ட படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புனரமைப்பு பணிகளை அடுத்து அங்கு இராணுவ பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புனரமைப்பு பணிகள் நேற்றைய தினம் அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் கோப்பாய் தெற்கு இராஜவீதியில் உள்ள வெள்ள வாய்கால் பிராயடி பகுதிக்கு அண்மையில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாமில் பொறுப்பதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஒருவர் அந்த கால பகுதியில் இடம்பெற்ற தமிழீழ விடுதலை புலிகளுடனான மோதலின் போது உயிரழந்துள்ளார். அப்போது குறித்த பகுதியில் அவரின் நினைவாக சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் அந்த சமாதி தற்போது வரை கவனிப்பாரற்று இருந்துள்ளது. இந்த நிலையிலேயே மீண்டும் குறித்த சமாதி கல்லறையை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம் இறங்கியுள்ளது. குறித்த பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்லாதவாரும், குறிப்பாக ஊடகங்கள் அப்பகுதியில் புகைப்படம் எடுப்பதற்கும் இராணுவம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்குறித்த இராணுவ அதிகாரியுடன் பணியாற்றிய சக இராணுவ சிப்பாயாக இருந்த பி.எம்.ஹரிஸ் ( லெப்டினன் ஜெனரல்) என்பவர் தற்போது இந்திய இராணுவ படைகளின் தளபதியாக உள்ளார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க குறித்த சமாதி புனரமைக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் இன்று 19 ஆம் திகதி குறித்த பகுதியில் உள்ள சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குறித்த தளபதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாகவும் தெரியவருகிறது.

எனவே இன்று 19 ஆம் திகதி நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வுக்கு குறித்த பகுதியை தயார்படுத்தும் வகையில் அந்த சமாதியை சுற்றியுள்ள பற்றைகள் குப்பைகளை நேற்றைய தினம் இலங்கை இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். அத்துடன் இராணுவ அதிகாரிகள் சிலரும் குறித்த பகுதியை பார்வையிட்டு சென்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்