மகிந்தவின் தீர்மானத்திற்கு காத்திருக்கும் கோதாபய

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ என்னை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானித்தால் அதனை ஏற்க தான் தயாராகவே இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு களமிறங்க முடியாது. இதனால் அவரின் அணியில் அவரால் பரிந்துரைக்கப்படும் நபர் போட்டியிடுவார். இதன்படி அவர் யார் என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் பொறுப்பு அவரிடமே தங்கியுள்ளது. அவர் அந்த தீர்மானத்தின் போது என்னை வேட்பாளராக களமிறக்க தீர்மானித்தால் அதனை நான் ஏற்றுக்கொள்வேன்.

எவ்வாறாயினும் இன்னும் அவர் அது தொடர்பாக தீர்மானிக்கவில்லை. சரியான நேரத்தில் அவர் தீர்மானம் எடுப்பார். என கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்