கோத்தபாயவுக்கு சவால் விடும் சரத் பொன்சேகா

வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால், அவருக்காக கட்டுப்பணத்தை செலுத்த தான் தயார் என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பகாவில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

”ஐதேக உறுப்பினர்கள் மாத்திரமன்றி, அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களும் கூட கோத்தாபய ராஜபக்ச குறித்து அச்சம் கொண்டுள்ளனர்.

ஏனென்றால், அவர் வெள்ளை வான் கடத்தல்கள், தாக்குதல்கள், பொதுச்சொத்துக்களை கொள்ளையிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டவர்.

கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றால், அவருக்காக கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாாவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இரா.சம்பந்தனால் இன்று (07) விடப்பட்ட
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர்
வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்