முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாள் சிங்கள பேரிவனவாதத்திற்கு எதிரானதல்ல-வரதராஜன் பார்த்திபன் யாழ்.மாநகர சபை உறுப்பினர்

முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாள் சிங்கள பேரிவனவாதத்திற்கு எதிரானதோ அல்லது அவர்களை கொச்சைப்படுத்துவதற்கோ அல்ல. தமிழ் மக்களின் தேசிய விடுதலை உரிமைப்போராட்டாத்தில் கொல்லப்பட்ட மக்களை ஊர்கூடி ஒன்று பட்டு மனிதில் நிறுத்தும் நாள். இந்த மண்ணிலே வாழுகின்ற ஒவ்வொரு தமிழனின் உதிரத்திலும் கண்ணீரிலும் முள்ளிவாய்க்கால் நினைவுகள் கலந்துள்ளது.

அந்தவகையில் குறித்த நாளில் அனைவரும் தாம் வாழுகின்ற இடத்திலும் பணிபுரிகின்ற இடத்திலும் அந்த உன்னதமானவர்களை தமது உறவுகளை நினைத்து நினைவேந்துவதில் என்ன தவறுள்ளது.
அவர்களை நிரந்தராமாக பணிநீக்கம் செய்யவில்லை தற்காலிமாக சம்பளத்துடன் கூடிய பணிநீக்கம், விசாரணை , சிங்கள மக்களை ஆறுதல்படுத்தவே மேற்படி நடவடிக்கை என்று பல காரணங்களை வங்கி மேலிடம் கூறினாலும் நினைவேந்தலில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் மீது ஹற்றன் நனசல் வங்கியின் மேலிடம் எடுத்த முடிவு கண்டனத்துக்குரியது

குறித்த வங்கி தனது வங்கியில் பணிபுரிகின்ற ஒரு ஊழியனின் உணர்வுகளை கூட உள்வாங்க முடியாதநிலையிருக்கும் போது அவ் வங்கி எவ்வாறு தமிழ் மக்களின் சேமிப்புக்களை உள்வாக்குவதற்கு என இங்கு செயற்பட முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது தமிழ்மக்கள் தங்கள் உணர்வுகளை சேமிக்கமுடியாத இடத்தில் அவர்களின் பணத்தை எவ்வாறு சேமிப்பார்கள்.

இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறலாம் என்ற ஒரு தீர்க்கதரிசனமான சிந்தiனாயால் தான் தமிழீழத் தேசியத்தலைவர் வங்கிகள் உட்பட தமிழ்தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை; உருவாக்கியிருக்கின்றார்.

தமிழ்மக்களின் உணர்வுகளை எத்தனையோ தடைகளைக் கொண்டு தடுத்த சிங்கள பேரினவாதம் இன்று உங்கள் உணர்வுகளை வெளிக்காட்டினால் உங்களின் வாழ்வாதாரத்தையும் பறிப்போம் என்ற ஒரு மிரட்டல் பாணியிலான செய்தியை இதன் மூலம் எமக்கு கூறுகின்றது. இதுவும் எமது உணர்வுகளை முடங்கச் செய்வதற்கான ஒரு வழிமுறையே. இந்த சிங்கள பேரினாவாத சிந்தனைக்கு வங்கியின் மேலிடமும் துணைபோயிருப்பது வேதனைக்குரிய விடயம்.

தமிழ்த் தேசியத்தின் உணர்வாலும் ஒற்றுமையாலும் ஒன்றுபட்டவர்களை எவராலும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரனா நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வரமுடியாது என்பதே வரலாறு எமக்கு கற்றுத்தந்த பாடம்.

குறித்த வங்கி ஊழியர்களின் உணர்வெழுச்சி கண்டு தலைவணங்குவதுடன் அவர்களின் உணர்வுகளை முடங்கச் செய்ய முனையும் வங்கியின் தெற்கு தலைமைப்பீடத்திற்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதோடு இவ்வாறான செயற்பாடுகள் தமிழ்தேசத்தில் தங்களுடைய வங்கிச்சேவைகளை முடங்கச் செய்வதற்கு வழிகோலும் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

நன்றி
வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

தொடர்டர்புடைய செய்திகள்
கிளிநொச்சி இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 9ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை தனது பாட நேரத்தில் தனியாக
வடக்கில் பலம் மிக்கதொரு மாற்று அரசியல் தலைமை உருவாவது நிச்சயமாகியுள்ள நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை
சிறையில் இருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*