அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல்?

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஆலோசகர்கள் கவனம் செலுத்துவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையும் பெறப்படவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம், வரும், 2020 ஜனவரியுடன் முடிவடையவுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், 2020 ஓகஸ்ட் வரை நீடிக்கும்.

எனினும் நான்கரை ஆண்டுகள் கழித்தே நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்