முல்­லைத்­தீவில் தொடர்ந்து பறிபோகும் நிலம்!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் நாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்து, கோம்பா சந்தி வரை­யான சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பிர­தே­சத்தை தொல்­பொ ருள் திணைக்­க­ளம் கைய­கப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது என்று அந்­தப் பகுதி மக்­கள் கூறு­கின்­றனர்.

தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­துக்கு என்று அடை­யா­ளப்­ப­டுத்­தும் நடு­கல் அங்கு நேற்று முன்­தி­னம் நடப்­பட்­டுள்­ளது என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தென்­னி­லங்கை மீன­வர்­கள் அத்­து­மீறி தொழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வாடி அமைத்து காணி­களை அப­க­ரிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். ஒரு­பு­றத்­தில் மகா­வலி எல் வல­யம் என்ற பெய­ரில் தமிழ் மக்­க­ளின் காணி­கள் சூறை­யா­டப்­பட்டு வரு­கின்­றன.

வன­வி­லங்­குத் திணைக்­க­ளத்­தி­ன­ரும், மக்­க­ளின் காணி­க­ளைக்­ கூட தமக்­குச் சொந்­த­மா­னவை என்று அடை­யா­ளப்­ப­டுத்­திக் கையப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

முல்­லைத்­தீவு மாவட்­டம் எல்லா வழி­க­ளி­லும் பறி­போய்க் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், தற்­போது புதி­தாக தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தி­ன­ரும் தமது கைவ­ரி­சை­யைக் காட்­டத் தொடங்­கி­யி­ருக்­கின்­ற­னர் என்று மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

நாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்­தான கோம்பா சந்தி வரை­யில் சுமார் 4 கிலோ மீற்­றர் பிர­தே­சத்­தில் பொது­மக்­க­ளுக்­குச் சொந்­த­மான தனி­யார் காணி­க­ளும் அடங்­கி­யுள்­ளன. அவற்­றை­யும் கைய­கப்­ப­டுத்­தும் வகை­யில் தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் நடு­கல் அமைந்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அத்­து­டன் நாயற்­றில் உள்ள விகா­ரா­தி­பதி தங்­கி­யி­ருக்­கும் வீட்­டி­லேயே, தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் இயங்­கு­கின்­றது என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அங்­கேயே தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் பெயர்ப் பல­கை­யும் காணப்­ப­டு­கின்­றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்