தந்தையின் கத்தி குத்தில் இருந்து மகளை காக்க வந்த முன்னாள் போராளி மரணம்!

பொத்துவில் ரொட்டை பிரதேசத்தில் தந்தையார் ஒருவர் தன் மகளான சிறுமியை கத்தியால் குத்த முற்பட்டபோது அதனை தடுக்க முற்பட்ட முன்னாள் போராளி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.

குறித்த சம்பம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக பொத்துவில் காவல் துறையினர் தெரிவித்தனர். கோமாரி ரொட்டையைச் சேர்ந்த 55 வயதுடைய சரவணமுத்து நாகராசா (வம்பு சிவராசா) என்றழைக்கப்படும் முன்னாள் போரளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி தெரியவருவதாவது கோமரி ரொட்டை பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று பிற்பகல் 2 மணியளவில் முஸ்லீம் குடும்பம் ஒன்று நுன்கடன் பிரச்சனை காரணமாக கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுவந்த நிலையில் குறித்த தந்தை மகளான சிறுமி மீது கத்தியால் குத்த முற்பட்போது அருகில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த முன்னாள் போராளி அதனைக் கண்டு தடுக்கமுற்பட்டபோது கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து கத்திகுத்து தாக்குதல் நடாத்தியவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக காவல் துறையினரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு;ள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொத்துவில் காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது பல்வேறு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக எதிர்வரும் 21ஆம் நாள் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும்
இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்துக்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நாவின்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*