ராஜினாமா? பேச்சிற்கே இடமில்லையென்கிறார் அனந்தி!

வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனிற்காக தனது பதவியை விட்டுக்கொடுக்கப்போவதில்லையென வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி.அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாக, மாகாண அமைச்சரவையில் ஆகக் கூடியது 5 பேர் மாத்திரமே பதவி வகிக்கலாம். ஏற்கனவே முதலமைச்சருடன் 5 பேர் பதவி வகிக்கின்றனர்.

நீதிமன்றத் தீர்ப்பினால் இவர்களில் ஒருவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாண மகளிர்விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரனே பதவி விலக்கப்படக்கூடுமென அவரது தொகுதி அரசியல் போட்டியாளர் ஈ.சரவணபவனின் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது அமைச்சர்களாக உள்ள க.சர்வேஸ்வரன் கல்வி அமைச்சரவாவும், க.சிவநேசன் விவசாய அமைச்சராகவும், ஜி.குணசீலன் சுகாதார அமைச்சரவாவும் உள்ளனர்.

இந்நிலையில் கட்சி சாரா அமைச்சரான அனந்தியை நீக்கலாமென குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்;துள்ள அனந்தி சரவணபவனிற்காக எனது பதவியை விட்டுக்கொடுக்கமுடியாது.எனது எதிர்காலத்திட்டம் அரசியல் தான்.எனது பாதுகாப்பிற்காக அரசியலில் இருக்கவேண்டியுள்ளது.அதனால் நான் அமைச்சு பதவியை ராஜினாமா செய்வேனென எதிர்பார்க்கவேண்டாமென தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெண் அமைச்சராக நான் ஒருத்தியே உள்ளேன் என்பது டெனீஸ்;வரனிற்கு நன்கு தெரியும்.அதனால் என்னை கலைத்துவிட்டு கதிரையேற அவர் விரும்பமாட்டாரெனவும் அனந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
எதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு,மற்றும் கண்டனப்பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை
“தமிழ் மக்களின் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்க்கமான
அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் நாளுக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*