அமைச்சர் பதவியை இழக்கிறாரா விஜயகலா?

விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனை இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி யி­லி­ருந்து தற்கா­லி­க­மாக நீக்­கு­வ­தற்குத் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி சே­ன­வுக்­குப் பரிந்­து­ரைத்­துள்ளார் என தகவலகள் வெளியாகியுள்ளன. எனினும் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

நேற்று முன்தினம் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் நேற்­று­முன்­தி­னம் யாழ்ப்பாணத்தில் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தார்.

எதிர்க்கட்சியினரின் அழுத்தங்களை அடுத்து இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னின் கருத்­துத் தொடர்பிலான விசா­ர­ணை­கள் நிறை­வ­டை­யும் வரை அவரை இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி­யில் இருந்து தற்­கா­லி­க­மாக நீக்­கு­வ­தே ரணிலின் நோக்கம் எனக் கூறப்படுகின்றது.

அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னின் கருத்­தில் அர­ச­மைப்போ அல்­லது தற்­போ­தைய சட்­டமோ மீறப்­பட்­டி­ருக்­கு­மா­யின் அது குறித்து ஆராய்ந்து உரிய சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு சட்­டமா அதி­ப­ருக்கு சபாநா­ய­கர் அறி­வித்­துள்­ளார்.

அது தொடர்­பில் நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை ஆளும் மற்­றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் சுட்­டிக்­காட்­டி­யதை அடுத்து, இந்­தத் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டார் என்று சபா­நா­ய­கர் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். இதனை
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸுக்கு
மாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை

About இலக்கியன்

மறுமொழி இடவும்