சிறிலங்காவின் சிவில் அமைப்புகளுக்கு 160 கோடி ரூபாவை வழங்குகிறது அமெரிக்கா

நல்லிணக்க செயல்முறைகளை ஊக்குவிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, அமெரிக்கா 160 கோடி ரூபாவை (10 மில்லியன் டொலர்) சிறிலங்காவின் சிவில் அமைப்புகளுக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.

அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (யுஎஸ்.எய்ட்) ஊடாக, மூன்றாண்டுத் திட்டத்துக்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 29ஆம் நாள் சிறிலங்காவின் சிவில் அமைப்புகளுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் திட்டங்களுக்காக இந்த நிதி செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்