காவிரி மருத்துவமனையிலிருந்து கருணாநிதி குடும்பத்தினர் வெளியேற்றம்!

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி மருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்தினர் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது.

இதனால் காவிரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் உறவினர்கள் அனைவரும் விரைந்தது மற்றும் போலீசாரின் திடீர் பாதுகாப்பு ஏற்பாடுகளால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடல் நிலை குறித்து மாலைக்கு மேல் தகவல் பரவவே பெரும் கூட்டம் கூடி விட்டது.

இதற்கிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகவும் சிகிச்சை பிறகு அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொண்டர் கூட்டம் கலையாமல் இருக்கவே போலீஸார் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். அத்தோடு தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கருணாநிதி குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து வெளியேறி விட்டனர்.

துணைவியர் ராஜாத்தி அம்மாள், பொதுச் செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட குடும்பத்தினரும், கட்சி முன்னணியினரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

கருணாநிதி உடல் நிலை குறித்து பேட்டி அளித்த பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மகன் மு.க.அழகிரி ஆகியோரும் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கலைப்பது சசிகலா, தினகரன் குடும்பத்தின் விருப்பமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி,
அதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால்

About இலக்கியன்

மறுமொழி இடவும்