கொலைஞர் கருணாநிதி கவலைக்கிடம்!

கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கையை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடைசியாக ஜூலை 31ம் தேதி, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பிறகு 6 நாட்களாகியும் இன்னும் காவேரி மருத்துவமனை சார்பில், கருணாநிதி உடல்நிலை பற்றி, அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலையில் இன்று காலை பின்னடைவு ஏற்பட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டி திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படுவதும், சிகிச்சைக்கு பிறகு சீராக்கப்படுவதும் கடந்த சில நாட்களாகவே இருக்கும் நிலைதான் என்று, திருநாவுக்கரசர் கூறினார்.

இருப்பினும், கருணாநிதி உடல்நிலை பற்றி அறிந்து கொள்ள திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலையில்,
இரவு 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனை சார்பில், கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், வயோதிகம் காரணமாக முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே அடுத்தகட்ட சிகிச்சை இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
வடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண
மன்னார் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் 4 கடற்படைத் தளத்திற்கு கடற்கரையோரத்தில் கோரப்படும் இடங்களை வழங்க முடியாது என மாவட்ட ஒருங்கிணைப்புக்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ. பார்த்திபனின் கோரிக்கைக்கு அமைவாக நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்

About இலக்கியன்

1 comments

கலைஞர் கருணாநிதி சந்திக்காத போராட்டங்கள் கிடையாது. இன்றும், மன உறுதியுடன் நோயை எதிர்த்து, போராடிவரும் துணிச்சலின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து உதவிட, தமிழ் கடவுள் முருகனை வேண்டிக்கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

*