இரா­ணுவ கட்­டளைத் தள­ப­திக்கும் சிப்­பாய்க்கும் மர­ண­தண்­டனை நீதி­பதி இளஞ்­செ­ழியன் தீர்ப்பு

யாழ்ப்­பா­ணத்தில் இளைஞர் ஒரு­வரை சட்­டத்­திற்கு முர­ணாக கைது செய்து அந்­ந­பரை சித்­தி­ர­வதை செய்து கொலை செய்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட ஶ்ரீலங்கா இராணுவ கட்­டளை தள­பதி மற்றும் இரா­ணுவ சிப்பாய் ஆகிய இரு­வ­ருக்கும் மரண தண்­டனை விதித்தும், ஒர் இரா­ணுவ அதி­கா­ரியை விடு­தலை செய்தும் திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

20 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற குறித்த குற்றச் சம்­ப­வத்தின் குற்­றப்­பத்­திரம் மீதான வழக்கு விசா­ர­ணை­யா­னது கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளாக திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்றில் இடம்­பெற்ற நிலையில் நேற்­றைய தினம் காலை 11.15 மணிக்கு நீதி­ப­தியால் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த இரு­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் 09.09.1998 ஆம் ஆண்டு யாழ்.குரு­நகர் பகு­தியை சேர்ந்த அன்ரன் குண­சே­கரம் என்ற இளைஞர் ஶ்ரீலங்கா இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு பின்னர் இரண்டு நாட்­களில் சட­ல­மாக யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.

இச் சம்­பவம் தொடர்பில் குறித்த நபரை கைது செய்து சென்ற இரா­ணுவ அதி­கா­ரிகள் முறையே 51ஆவது முகாம் தள­பதி முதலாம் எதி­ரி­யா­கவும், யாழ்.512ஆம் படைப்­பி­ரிவின் கட்­டளை தள­பதி இரண்டாம் எதி­ரி­யா­கவும், திரு­நெல்­வேலி இரா­ணுவ முகாம் இரா­ணுவ அதி­காரி மூன்றாம் எதி­ரி­யா­கவும் பெயர் குறிப்­பி­டப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

குறித்த நபரை தாம் கைது செய்து திரு­நெல்­வேலி முகாமில் வைத்­தி­ருந்த போது இந் நபர் முகாமில் மேலி­ருந்து கீழே வீழ்ந்து இறந்­த­தாக இவ் எதி­ரி­களால் பொலிஸ் நிலை­யத்தில் குறிப்­பி­டப்­பட்­ட­தை­ய­டுத்தே இம் மூவ­ருக்கும் எதி­ராக யாழ்.நீதிவான் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

எனினும் யாழ்.நீதிவான் நீதி­மன்றில் இவ் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கு பாது­காப்பு இல்லை என குறிப்­பிட்டு குறித்த வழக்­கா­னது அநு­ரா­த­புரம் நீதிவான் நீதி­மன்­றுக்கு மாற்­றப்­பட்­டது. அங்கு வழக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்று குறித்த மூன்று இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கும் எதி­ராக யாழ்.மேல் நீதி­மன்றில் கடந்த 2007ஆம் ஆண்டு கொலை குற்­றச்­சாட்டு பத்­தி­ர­மா­னது சட்­டமா அதி­பரால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

யாழ்.மேல் நீதி­மன்­றிலும் குறித்த இரா­ணுவ அதி­கா­ரி­க­ளான எதி­ரி­க­ளுக்கு பாது­காப்பு இல்லை என அவர்கள் தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­த­தை­ய­டுத்து இவ் வழக்கு விசா­ர­ணை­க­ளா­னது திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்­றுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மாற்­றப்­பட்­டது.

இந்­நி­லையில் கடந்த ஒன்­பது வரு­டங்­க­ளாக திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்றில் வழக்கு விசா­ரணை இடம்­பெற்­றது. இவ் வழக்கு விசா­ர­ணை­யினை திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற அரச சட்­ட­வாதி சக்­க­ர­வர்த்தி ஜாதவன் நெறிப்­ப­டுத்­தி­ய­துடன் எதி­ரிகள் சார்பில் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கத் தலை­வரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான யூ.ஆர்.டி.சில்வா முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார்.

குறித்த வழக்கில் இரண்டு இரா­ணுவ உத்­தி­யோ­கத்­தர்கள் அரச தரப்பு சாட்­சி­யாக சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர். ஒருவர் இரா­ணுவ ஜீப் சாரதி மற்றும் இரா­ணுவ உத்­தி­யோ­கத்­த­ராவார்.

குறிப்­பாக குறித்த நபரை முதலாம் இரண்டாம் மூன்றாம் எதி­ரிகள் கைது செய்து திரு­நெல்­வேலி முகாமில் தடுத்து வைத்­தி­ருந்­த­தாக இரா­ணுவ ஜீப் வண்டி சாரதி சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

அதே­போன்று இவ் வழக்கில் மற்­று­மொரு முக்­கி­ய­மான சாட்­சியம் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். அதா­வது யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய நிபுணர் வைத்­தியர் மயூ­ரதன் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். இவர் தனது சாட்­சி­யத்தில்,

குறித்த நப­ரது உடலில் 21 காயங்கள் காணப்­பட்­ட­தாக சாட்­சி­யத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார். உடலின் மார்ப்பு, நெஞ்சு, ஆணு­றுப்பு, ஆணு­றுப்பின் விதை பகுதி போன்­ற­வற்றில் காயங்கள் காணப்­பட்­ட­தா­கவும் உடலில் ஏற்­பட்ட அதிக இரத்த போக்கே மரணம் நிகழ காரணம் எனவும் சாட்­சி­யத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இவரின் உடலில் காணப்­பட்ட 21 காயங்­களில் பல கண்டல் காயங்­களும், பல கிழிஞ்சல் காயங்­களும் காணப்­பட்­ட­தாக சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

மேலும் கொல்­லப்­பட்ட நபரின் மனைவி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது, எனது கண­வரை ஜீப்பில் கொண்டு வந்து வீட்­டினை சோதனை செய்ய வந்த போது, இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ‘ஏன் எனது கண­வரை கைது செய்­தீர்கள் ? என கேட்­ட­தா­கவும், ஆனால் அவர்கள் அதற்கு பதி­ல­ளிக்­காமல் அவரை அழைத்து சென்­ற­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

அத்­துடன் வாக­னத்தை கலைத்­துக்­கொண்டு சென்ற போது வாகனம் குரு­நகர் இரா­ணுவ முகாம் பக்­க­மாக சென்று மறைந்த்­தா­கவும் பின்னர் 48 மணி நேரத்தில் சட­லா­ம­கவே தனது கண­வரை யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் பிண­வ­றையில் கண்­ட­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

இவ்­வாறு பல சாட்­சி­யங்­க­ளது சாட்­சி­யங்­க­ளையும், எதி­ரி­த­ரப்பு சட்­டத்­த­ர­ணி­யி­னது வாதங்­க­ளையும் பரி­சீ­லித்த மன்­றா­னது நேற்­றைய தினம் இவ் வழக்கின் தீர்ப்­புக்­காக திக­தி­யிட்­டி­ருந்­தது.

இதன்­படி நேற்­றைய தினம் காலை பதி­னொரு மணி­ய­ளவில் நீதி­பதி தனது தீர்ப்­பினை திறந்த மன்றில் அறி­வித்­தி­ருந்தார். அத்­துடன் நீதி­பதி தனது தீர்பில் இலங்கை உயர் நீதி­மன்றம் அடிப்­படை உரிமை மீறல் தொடர்­பா­கவும், சித்­தி­ர­வதை தொடர்­பான வழக்­கு­க­ளிலும் வழங்­கிய தீர்ப்­புக்­க­ளையும், ஐ.நா.யுத்த குற்ற நீதி­மன்­றங்கள் வழங்­கிய தீர்ப்­புக்­க­ளையும் மேற்­கோள்­காட்டி தனது தண்­டனை தீர்ப்பை வழங்­கி­யி­ருந்தார்.

இந்த வழக்கில் முன்­வைக்­கப்­பட்ட சாட்­சி­யங்­களை ஆராய்­கின்ற போது, குறித்த இளைஞன் சட்ட முர­ணாக கைது செய்­யப்­பட்­டமை, சட்ட முர­ணாக தடுத்து வைக்­கப்­பட்­டமை, தடுப்புக் காவல் சித்­தி­ர­வதை, நீதி விசா­ர­ணை­யற்ற படு­கொலை என்­ப­ன­வற்­றிக்கு குறித்த இளைஞன் கைது செய்­யப்­பட்டு 48 மணி நேரத்தில் 21 காயங்­க­ளுடன் சட­ல­மாக மீட்­கப்­பட்­டமை சான்­றா­க­வுள்­ளது.

மேலும் இவ் வழக்கின் முதலாம் எதி­ரி­யான 51ஆவது படைத் தள­பதி அச்­சு­வேலி முகாமை சேர்ந்­தவர். அவர் குறித்த இளை­ஞனை கைது செய்­தமை, தடுத்து வைத்­தமை என்­ப­ன­வற்­றுடன் மாத்­தி­ரமே தொடர்­பு­பட்­டுள்­ள­துடன் அவர் சித்­தி­ர­வதை புரிந்­தமை, கொலை செய்­தமை என்­ப­ன­வற்­றுடன் தொடர்­பு­பட்டார் என்­ப­தற்கு போது­மான சாட்­சி­யங்கள் இல்லை.

எனவே இவ் வழக்­கி­லி­ருந்து இவ் இரா­ணுவ அதி­காரி விடு­தலை செய்­யப்­ப­டு­கின்றார். அத்­துடன் 512ஆவது கட்­டளை தள­ப­தியின் கட்­டுப்­பாட்­டி­லேயே இந்த திரு­நெல்­வேலி முகாம் உள்­ளது. மற்றும் முன்­வைக்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் ஆதா­ரங்­க­ளூ­டாக பார்க்­கின்ற போது இரண்டாம் எதி­ரி­யான இரா­ணுவ கட்­டளை தள­பதி, மற்றும் திரு­நெல்­வேலி இரா­ணுவ முகாம் அதி­காரி ஆகி­யோ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டா­னது நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படுகின்றது.

எனவே குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட 512ஆம் படை பிரிவின் கட்டளை தளபதி மற்றும் திருநெல்வேலி இராணுவ அதிகாரி ஆகிய இருவருக்கும் ஜனாதிபதி விரும்பும் நேரத்தில் விரும்பும் இடத்தில் கழுத்தில் சுருக்கு கயிறிட்டு உடலில் இருந்து உயிர் பிரியும் வரை துக்கிலிட்டு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு ஆணை பிறப்பித்தார்.

குறித்த மரண தண்டனை தீர்ப்பானது வாசிக்கப்படும் போது நீதிமன்றின் அனைத்து விளக்குகளும், அணைக்கப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்ட பேனா முறித்து எறியப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் சில நிமிடம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்